குமாரசுவாமியம்

குமாரசுவாமியம் 1. மூலகாண்டம் காவியவியல் படலம் பூங்கமலத் தேவனருள் பொற்கடத்துள் பவித்த பொதிமவரைக் குறுமுனிசெந் தமிழ்ப்பொருள்கேட் பதற்காய் ஓங்கியசந் தாசலச்செந் தூர்க்கிவனெத் தினமும் உற்றிடுமத் தினத்திலொரு தினத்திலிவன் உளத்தில் தாங்கிய சோ திடத்தியல்சொல் குருநாத தேவ சகாயதிரு வுளமிரங்கித் தக்கதெனக் கெனுமுன் தேங்கமழ்வாய் மலர்ந்துதின முதற்பேர்சொற் றனனத் திரிதருபுத் திரியெனுமத் திரிபுரைத் திரனே. அழகிய கமலாசனனான பிரமதேவன் தந்தருளிய பொன் போலும் பிரபையையுடைய கும்போதயனான பொதிய வரையின்கண் வீற்றிருக்கும் அங்குட்டப்பிராமணவடிவாகிய அகத்தியனானவன், செவ்வியதாகிய தமிழ் நூல்களின் பொருள்களைக் கேட்கும் பொருட்டு, மிகுதியும் வளர்ந்தோங்கிய சந்தனசைலத்தை உடைய திருச்செந்தூர்க்குச் சதாகாலமும் வந்து கொண்டிருப்பன். இப்படி வருந்தினங்களில் ஒருநாள் சகலலோக சம்பிரதாயங்களையும் சோதிடத்தினாலேயே தான் தெரிய வேண்டுமென்று, தன்னுடைய இதயத்தில் உதயமானபடியால் தனது குரு சன்னிதானத்தில் வந்து, என் குருநாத தேவசகாய என்று அநேகமாகிய தோத்திரம் செய்து, சோதிட நூலை அடியேனுக்குத் திருவுளமிரங்கி உபதேசித்தருள வேண்டுமென்று, இவன் விண்ணப்பம் செய்யாமுன்னம், வாசம் கமழாநின்ற செவ்வாம்பலைப் போலும் அழகினையுடைய திருவாய் மலர்ந்து முதலில் நட்சத்திரம் முதலானவைக்கெல்லாம் உரிச்சொல் உரைத்தனன், பர்வதராஜன் தந்த புத்திரியாகிய பராசத்திக்குப் புத்திரனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. காவியவியல் படலம் முற்றிற்று. குமார - 1
குமாரசுவாமியம் 1 . மூலகாண்டம் காவியவியல் படலம் பூங்கமலத் தேவனருள் பொற்கடத்துள் பவித்த பொதிமவரைக் குறுமுனிசெந் தமிழ்ப்பொருள்கேட் பதற்காய் ஓங்கியசந் தாசலச்செந் தூர்க்கிவனெத் தினமும் உற்றிடுமத் தினத்திலொரு தினத்திலிவன் உளத்தில் தாங்கிய சோ திடத்தியல்சொல் குருநாத தேவ சகாயதிரு வுளமிரங்கித் தக்கதெனக் கெனுமுன் தேங்கமழ்வாய் மலர்ந்துதின முதற்பேர்சொற் றனனத் திரிதருபுத் திரியெனுமத் திரிபுரைத் திரனே . அழகிய கமலாசனனான பிரமதேவன் தந்தருளிய பொன் போலும் பிரபையையுடைய கும்போதயனான பொதிய வரையின்கண் வீற்றிருக்கும் அங்குட்டப்பிராமணவடிவாகிய அகத்தியனானவன் செவ்வியதாகிய தமிழ் நூல்களின் பொருள்களைக் கேட்கும் பொருட்டு மிகுதியும் வளர்ந்தோங்கிய சந்தனசைலத்தை உடைய திருச்செந்தூர்க்குச் சதாகாலமும் வந்து கொண்டிருப்பன் . இப்படி வருந்தினங்களில் ஒருநாள் சகலலோக சம்பிரதாயங்களையும் சோதிடத்தினாலேயே தான் தெரிய வேண்டுமென்று தன்னுடைய இதயத்தில் உதயமானபடியால் தனது குரு சன்னிதானத்தில் வந்து என் குருநாத தேவசகாய என்று அநேகமாகிய தோத்திரம் செய்து சோதிட நூலை அடியேனுக்குத் திருவுளமிரங்கி உபதேசித்தருள வேண்டுமென்று இவன் விண்ணப்பம் செய்யாமுன்னம் வாசம் கமழாநின்ற செவ்வாம்பலைப் போலும் அழகினையுடைய திருவாய் மலர்ந்து முதலில் நட்சத்திரம் முதலானவைக்கெல்லாம் உரிச்சொல் உரைத்தனன் பர்வதராஜன் தந்த புத்திரியாகிய பராசத்திக்குப் புத்திரனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . காவியவியல் படலம் முற்றிற்று . குமார - 1