குமாரசுவாமியம்

328 கரமலர் சிரமேல் கூப்பிக் கண்கள் நீர் பொழிய நின்று புறமது புளகம் போர்ப்பப் பொய்யிலன் புருவ மாகி விரவிய அழல்சேர்வுற்ற வெண்ணெய்போல் உருகி நெஞ்சம் பரவும்நாத் தழுதழுப்பப் பணிந்தனன் பழிச்சலுற்றான். 26 ஆதியே போற்றி போற்றி அனகனே போற்றி போற்றி நீதியே போற்றி போற்றி நிமலனே போற்றி போற்றி சோதியே போற்றி போற்றி தூயனே போற்றி போற்றி பூதியே இலகும் எண்தோள் புனிதநல் புதல்வா போற்றி. 27 ஆரணா போற்றி போற்றி ஆறுமா முகனே போற்றி காரணா போற்றி போற்றி கருணையங் கடலே போற்றி வாரணா போற்றி போற்றி வள்ளிநா யகனே போற்றி பூரணா போற்றி போற்றி பூங்கடம் பணிவாய் போற்றி. 28 வேலனே போற்றி போற்றி விண்ணவர்க் கிறையே போற்றி கோலனே போற்றி போற்றி குஞ்சரி கொழுநா போற்றி மூலனே போற்றி போற்றி முருகனே போற்றி போற்றி சீலனே போற்றி போற்றி செந்தில்வாழ் குகனே போற்றி. 29) வெருவரு பிறவிக் கெல்லாம் வித்தெனும் வரனை யுற்றே இருநில மதனி லென்று மிழிதொழில் பூண்டு ளேற்கும் குருமணி இமைக்கும் செந்தில் குழகனே குமர வேளே! அருமறை சிரத்தின் வாழும் அமலநின் அருளும் உண்டோ ? 30 நீரிடைக் குமிழி போலும் நிலையிலா யாக்கை தன்னைப் பாரிடை நிலையென்றுன்னாப் பழித்தொழில் பூண்டு ளேற்கும் வாரிடைப் பொலியும் கொங்கை வனக்குற மடந்தை பாகா! வோரிடை யூறு மின்றி உயருநின்னருளும் உண்டோ ? 31 வறிய நுண் மருங்கு லாரை மண்ணொரு நிதியை வேட்டுப் பொறிவழி யூடு சென்று புண்தொழில் பூண்டு ளேற்கும்
328 கரமலர் சிரமேல் கூப்பிக் கண்கள் நீர் பொழிய நின்று புறமது புளகம் போர்ப்பப் பொய்யிலன் புருவ மாகி விரவிய அழல்சேர்வுற்ற வெண்ணெய்போல் உருகி நெஞ்சம் பரவும்நாத் தழுதழுப்பப் பணிந்தனன் பழிச்சலுற்றான் . 26 ஆதியே போற்றி போற்றி அனகனே போற்றி போற்றி நீதியே போற்றி போற்றி நிமலனே போற்றி போற்றி சோதியே போற்றி போற்றி தூயனே போற்றி போற்றி பூதியே இலகும் எண்தோள் புனிதநல் புதல்வா போற்றி . 27 ஆரணா போற்றி போற்றி ஆறுமா முகனே போற்றி காரணா போற்றி போற்றி கருணையங் கடலே போற்றி வாரணா போற்றி போற்றி வள்ளிநா யகனே போற்றி பூரணா போற்றி போற்றி பூங்கடம் பணிவாய் போற்றி . 28 வேலனே போற்றி போற்றி விண்ணவர்க் கிறையே போற்றி கோலனே போற்றி போற்றி குஞ்சரி கொழுநா போற்றி மூலனே போற்றி போற்றி முருகனே போற்றி போற்றி சீலனே போற்றி போற்றி செந்தில்வாழ் குகனே போற்றி . 29 ) வெருவரு பிறவிக் கெல்லாம் வித்தெனும் வரனை யுற்றே இருநில மதனி லென்று மிழிதொழில் பூண்டு ளேற்கும் குருமணி இமைக்கும் செந்தில் குழகனே குமர வேளே ! அருமறை சிரத்தின் வாழும் அமலநின் அருளும் உண்டோ ? 30 நீரிடைக் குமிழி போலும் நிலையிலா யாக்கை தன்னைப் பாரிடை நிலையென்றுன்னாப் பழித்தொழில் பூண்டு ளேற்கும் வாரிடைப் பொலியும் கொங்கை வனக்குற மடந்தை பாகா ! வோரிடை யூறு மின்றி உயருநின்னருளும் உண்டோ ? 31 வறிய நுண் மருங்கு லாரை மண்ணொரு நிதியை வேட்டுப் பொறிவழி யூடு சென்று புண்தொழில் பூண்டு ளேற்கும்