குமாரசுவாமியம்

327 வேதன்மால் பதவி எல்லாம் விரும்பினார்க் கினிது நல்கும் நாதனாம் குமரவேளும் நகையறு முகத்த னானான். 19 அன்னைதை அரனும் நோக்கி ஐயநீ கவலல் வேண்டா இன்னல் செய் கொலைகள் காமம் இருங்குரவனுக்குத் தீங்கு முன்னல்பொய் மொழிதல் சைவ முறையினை இகழ்ந்து பேச உன்னுமிக் குணங்கள் எல்லாம் மொழிந்து மெய் அறிஞ ராகி 20 சந்தமார் உனது பாத சரோருகம் இறைஞ்சு வார்க்கே இந்தநூல் பலிப்பதாக என்றலும் இறைவன் போற்றிக் கந்தமார் குழலாள் வள்ளி கணவனும் கயிலை நீங்கி வந்தமா மயில்மீ தேறி வளங்கொள்செந்தூரைச் சார்ந்தான் 21 அனந்தனும் வியந்து கூறும் அறிவுடை வணிகா! நல்ல மனந்தனில் விழைந்த வெல்லாம் வழங்குவன் கருணை வள்ளல் சினந்தனர் நீயும் அன்னாள் சேவடிக் கமலம் போற்றில் கனந்தரும் அனைய நூலைக் கசடறப் பயிற்று மன்னோ 22 அந்தநூல் முறைமை யாலே அனைத்தையும் தெளிய லாகும் மைந்தநீ போதி என்றாள் வணிகனும் குரவற் போற்றிச் சந்தமா மனையில் ஏகித் தாயிடை விடையும் பெற்றுச் சிந்துபூம் பொழில்கள் ஆரூம் செந்திலம் பதியைச் சேர்ந்தான். 23 அரம்பையர் நடிக்கும் ஓசை அணிகெழு முழவின் ஓசை அரம்பயில் யாழின் ஓசை சுருதிகள் முழங்கும் ஓசை வரம்பெறுகவிகள் கூறு மங்களப் பாட்டின் ஓசை நிரம்பிவிண்ண ளவும் ஓங்கும் நெடுமதில் கோயில் புக்கான். 24 அண்டமும் அயனும் மாலும் ஆயிரம் செங்கணானும் தொண்டரும் மிடைந்து நிற்கும் தூயசன்னதியைச் சார்ந்து பண்டரு மொழியாள் வள்ளி பாகனைப் பரமன் ஏற்றி கண்டரும் அமல வேளைக் கண்ணிணைக் களிப்பக் கண்டான். 25
327 வேதன்மால் பதவி எல்லாம் விரும்பினார்க் கினிது நல்கும் நாதனாம் குமரவேளும் நகையறு முகத்த னானான் . 19 அன்னைதை அரனும் நோக்கி ஐயநீ கவலல் வேண்டா இன்னல் செய் கொலைகள் காமம் இருங்குரவனுக்குத் தீங்கு முன்னல்பொய் மொழிதல் சைவ முறையினை இகழ்ந்து பேச உன்னுமிக் குணங்கள் எல்லாம் மொழிந்து மெய் அறிஞ ராகி 20 சந்தமார் உனது பாத சரோருகம் இறைஞ்சு வார்க்கே இந்தநூல் பலிப்பதாக என்றலும் இறைவன் போற்றிக் கந்தமார் குழலாள் வள்ளி கணவனும் கயிலை நீங்கி வந்தமா மயில்மீ தேறி வளங்கொள்செந்தூரைச் சார்ந்தான் 21 அனந்தனும் வியந்து கூறும் அறிவுடை வணிகா ! நல்ல மனந்தனில் விழைந்த வெல்லாம் வழங்குவன் கருணை வள்ளல் சினந்தனர் நீயும் அன்னாள் சேவடிக் கமலம் போற்றில் கனந்தரும் அனைய நூலைக் கசடறப் பயிற்று மன்னோ 22 அந்தநூல் முறைமை யாலே அனைத்தையும் தெளிய லாகும் மைந்தநீ போதி என்றாள் வணிகனும் குரவற் போற்றிச் சந்தமா மனையில் ஏகித் தாயிடை விடையும் பெற்றுச் சிந்துபூம் பொழில்கள் ஆரூம் செந்திலம் பதியைச் சேர்ந்தான் . 23 அரம்பையர் நடிக்கும் ஓசை அணிகெழு முழவின் ஓசை அரம்பயில் யாழின் ஓசை சுருதிகள் முழங்கும் ஓசை வரம்பெறுகவிகள் கூறு மங்களப் பாட்டின் ஓசை நிரம்பிவிண்ண ளவும் ஓங்கும் நெடுமதில் கோயில் புக்கான் . 24 அண்டமும் அயனும் மாலும் ஆயிரம் செங்கணானும் தொண்டரும் மிடைந்து நிற்கும் தூயசன்னதியைச் சார்ந்து பண்டரு மொழியாள் வள்ளி பாகனைப் பரமன் ஏற்றி கண்டரும் அமல வேளைக் கண்ணிணைக் களிப்பக் கண்டான் . 25