குமாரசுவாமியம்

175 அவமலது நல்லவர்ப்பெற் றிடிலிவனா சாரம் அல்லவெனில் மற்றதுவாம் அருகனனல் கூடிச் சுமுளமீன் தசமாகத் தோன்றிலறக் கோனால் சுபரொடுங்கூ டின்மோட்ச முடையவரிவ ரெனுமே. 211 ஒன்பதாம், பத்தாமிடத்திற்கு உடையவர்கள், சனி, சேய் வர்க்கம் ஏறில் எக்கிய கருமத்தை உடையவர் என்க, இப்பலத்துடனே சந்திரன், சனிவர்க்கம் ஏறில் எதிர்கருமத்தை உடையவர் என்க. பத்தாமிடத்திற்கு உடையவர் சுபராகி சுபவர்க்கம் ஏறில் ஆசாரவான் என்க. பாவ வர்க்கமாகில் அனாசாரவான் என்க. மீனம் சுபமாக அது பத்தாமிடமாகிச் சேய், புதன்கூடிலும்; ஒன்பதாமிடத்திற்கு உடையவன் நான்கு சுபர்களுடன் கூடிலும் மோட்சத்தை உடைவர் என்க. வரத்தினிற்பார்க் கவனுதய மறையவன்பெண் மதியாய் வருடையிலாங் கிசமான தனுப்புரமாய் வரினும் தரத்தினியுமந் தணனுறினும் சிவலோகம் இரவி தழலிவர்கள் பெலக்கினர ருலகிலிர சதமும் நிரத்துகலைக் குளவிதுவும் பெலத்தில் பிதி ருலக நிதிமினத்து தயமுறினி மலருடன் கூடித் திரத்துதய கேந்திரத்தில் திவிக்கிரவில் சரமாய்ச் சீவனுறில் இவன்சேர்தல் பிரமபதம் எனுமே. 212 ஏழாமிடத்தில் சுக்கிரனும், ஒன்றாமிடத்தில் குருவும், கன்னி ராசியில் சந்திரனுமாக, இலக்கனம் தனுவாகி மேடாங்கிசம் ஏறிலும், லக்கனத்தில் வியாழன் இருக்கிலும், சிவலோகம் அடைவன் என்க. கிரகாதிபரில் இரவி, சேய் பெலக்கில் பூலோகத்தை அடைவான் என்க. சுக்கிரனும், பூர்வபக்ஷத்துச்சந்திரனும் பெலக்கில் பிதுர் உலகம் அடைவன் என்க, மீன இலக்கனமாகிக் குரு இருக்கிலும் திவியில் திரமும் நிசியில் சரமும் லக்கனமாக கேந்திரத்தில் சுபருடன் வியாழன்கூடி இருக்கிலும் பிரமபதம் அடைவன் என்க.
175 அவமலது நல்லவர்ப்பெற் றிடிலிவனா சாரம் அல்லவெனில் மற்றதுவாம் அருகனனல் கூடிச் சுமுளமீன் தசமாகத் தோன்றிலறக் கோனால் சுபரொடுங்கூ டின்மோட்ச முடையவரிவ ரெனுமே . 211 ஒன்பதாம் பத்தாமிடத்திற்கு உடையவர்கள் சனி சேய் வர்க்கம் ஏறில் எக்கிய கருமத்தை உடையவர் என்க இப்பலத்துடனே சந்திரன் சனிவர்க்கம் ஏறில் எதிர்கருமத்தை உடையவர் என்க . பத்தாமிடத்திற்கு உடையவர் சுபராகி சுபவர்க்கம் ஏறில் ஆசாரவான் என்க . பாவ வர்க்கமாகில் அனாசாரவான் என்க . மீனம் சுபமாக அது பத்தாமிடமாகிச் சேய் புதன்கூடிலும் ; ஒன்பதாமிடத்திற்கு உடையவன் நான்கு சுபர்களுடன் கூடிலும் மோட்சத்தை உடைவர் என்க . வரத்தினிற்பார்க் கவனுதய மறையவன்பெண் மதியாய் வருடையிலாங் கிசமான தனுப்புரமாய் வரினும் தரத்தினியுமந் தணனுறினும் சிவலோகம் இரவி தழலிவர்கள் பெலக்கினர ருலகிலிர சதமும் நிரத்துகலைக் குளவிதுவும் பெலத்தில் பிதி ருலக நிதிமினத்து தயமுறினி மலருடன் கூடித் திரத்துதய கேந்திரத்தில் திவிக்கிரவில் சரமாய்ச் சீவனுறில் இவன்சேர்தல் பிரமபதம் எனுமே . 212 ஏழாமிடத்தில் சுக்கிரனும் ஒன்றாமிடத்தில் குருவும் கன்னி ராசியில் சந்திரனுமாக இலக்கனம் தனுவாகி மேடாங்கிசம் ஏறிலும் லக்கனத்தில் வியாழன் இருக்கிலும் சிவலோகம் அடைவன் என்க . கிரகாதிபரில் இரவி சேய் பெலக்கில் பூலோகத்தை அடைவான் என்க . சுக்கிரனும் பூர்வபக்ஷத்துச்சந்திரனும் பெலக்கில் பிதுர் உலகம் அடைவன் என்க மீன இலக்கனமாகிக் குரு இருக்கிலும் திவியில் திரமும் நிசியில் சரமும் லக்கனமாக கேந்திரத்தில் சுபருடன் வியாழன்கூடி இருக்கிலும் பிரமபதம் அடைவன் என்க .