குமாரசுவாமியம்

171 தேவகாங்கிசத்து உன்னதத்தும், திவாகாலத்திரத்தும், நிசகாலச் சரத்தும், விடகடிகை அற்ற வாரத்தும் வியாழ நடவடி வர்க்கத்தும் பூருவ பட்சத்தும் அமுதகடிகை இலக்கனமாக செனிக்கில் மகீபதி. மகிமகன்மூன் றிறைபொனொன்றுக் கதிபனதி பெலமாய் மாதுரிசைக் கிறைபார்க்க வனசனொரு மருவில் சிகி அரவுச் சோதஅம்பொன் சேர்தலன்றே அனலில் சிரமாக இவர்களுறத் தெசத்திறைபூண் இருக்கில் சுகிர்தமுடை யோர்கோண கேந்திரமுற் றுயரச் சுக்கிரனுக் காறில்விதுத் தோன்றிலிவன் உலகில் அகிதமிதம் இதுவெனக்கண் டவரவருக் கான வாக்கினையன் புடைமையும் செய் தரசுசெய்த திவனே. 205 செவ்வாய் மூன்றாமிடத்திற்கு உடையவன், குரு, இலக்கனேசன் இவர்கள் அதிபெலமாகி இருக்க; நான்கு, பத்தாமிடத்திற்கு உடையவர்கள் பார்க்க, இரவி மேடத்தில் இருக்கிலும், இராகு, கேது உச்சமாக அதுவே இலக்கனமாகிக் குருகூட அல்லது மேடம், விருச்சிகம் இலக்கனமாகி இவர்கள் கூடியிருக்க, பத்தாமிடத்திற்கு உடையவன் மூன்றாம் இடத்தில் இருக்கிலும் சுபகிரகங்கள் கேந்திர கோண உச்சத்தில் இருக்க, சுக்கிரனுக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் இருக்கிலும், இதம், அகிதம் அறிந்து இதத்துக்கு அன்புடைமையும் ஆகிதத்துக்கு ஆக்கிணையும் செய்து இராசாதி பத்தியம் பண்ணுவான். திவிமனன் சேய் பொன்சிலைக்கோண் டெசத்திறைவர்க் கமுமாய்ச் சிரக்கோன்கேந் திரக்கோணத் தாக இவர் சேரில் புவிமனராய்த் தேட்கோணப் பொன்மதிவிப் பிரராய்ப் புதன்துலைக்கோன் வைசியராய்ப் புகரிடபக் கோனே அலவில்வது சூத்தி ரராய் முற்போற் பெலமாக் கூடி நாற்குலமும் செய்தொழில்நேர் நடத்துதல்சொற் றிடலால் சவுரியின மாகவரில் சங்கரசா தியுமாய்ச் சர்ப்பமெனில் நீசருமாய்த் தொழில்செய் குவரே. 206
171 தேவகாங்கிசத்து உன்னதத்தும் திவாகாலத்திரத்தும் நிசகாலச் சரத்தும் விடகடிகை அற்ற வாரத்தும் வியாழ நடவடி வர்க்கத்தும் பூருவ பட்சத்தும் அமுதகடிகை இலக்கனமாக செனிக்கில் மகீபதி . மகிமகன்மூன் றிறைபொனொன்றுக் கதிபனதி பெலமாய் மாதுரிசைக் கிறைபார்க்க வனசனொரு மருவில் சிகி அரவுச் சோதஅம்பொன் சேர்தலன்றே அனலில் சிரமாக இவர்களுறத் தெசத்திறைபூண் இருக்கில் சுகிர்தமுடை யோர்கோண கேந்திரமுற் றுயரச் சுக்கிரனுக் காறில்விதுத் தோன்றிலிவன் உலகில் அகிதமிதம் இதுவெனக்கண் டவரவருக் கான வாக்கினையன் புடைமையும் செய் தரசுசெய்த திவனே . 205 செவ்வாய் மூன்றாமிடத்திற்கு உடையவன் குரு இலக்கனேசன் இவர்கள் அதிபெலமாகி இருக்க ; நான்கு பத்தாமிடத்திற்கு உடையவர்கள் பார்க்க இரவி மேடத்தில் இருக்கிலும் இராகு கேது உச்சமாக அதுவே இலக்கனமாகிக் குருகூட அல்லது மேடம் விருச்சிகம் இலக்கனமாகி இவர்கள் கூடியிருக்க பத்தாமிடத்திற்கு உடையவன் மூன்றாம் இடத்தில் இருக்கிலும் சுபகிரகங்கள் கேந்திர கோண உச்சத்தில் இருக்க சுக்கிரனுக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் இருக்கிலும் இதம் அகிதம் அறிந்து இதத்துக்கு அன்புடைமையும் ஆகிதத்துக்கு ஆக்கிணையும் செய்து இராசாதி பத்தியம் பண்ணுவான் . திவிமனன் சேய் பொன்சிலைக்கோண் டெசத்திறைவர்க் கமுமாய்ச் சிரக்கோன்கேந் திரக்கோணத் தாக இவர் சேரில் புவிமனராய்த் தேட்கோணப் பொன்மதிவிப் பிரராய்ப் புதன்துலைக்கோன் வைசியராய்ப் புகரிடபக் கோனே அலவில்வது சூத்தி ரராய் முற்போற் பெலமாக் கூடி நாற்குலமும் செய்தொழில்நேர் நடத்துதல்சொற் றிடலால் சவுரியின மாகவரில் சங்கரசா தியுமாய்ச் சர்ப்பமெனில் நீசருமாய்த் தொழில்செய் குவரே . 206