குமாரசுவாமியம்

99 அடிக்கு அந்தந்த மாதப் பகல் நாழிகை பாதியை ஏழில் பெருக்கிக் கொடுக்கக் கண்ட ஈவு பகல் நாழிகையாம். இரவு நாழிகை அறியும்படி உரோகணி, மிருகசிரம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம் இவை ஆறும் உச்சம் வருமுன் உச்சமாம். மகம், பூரம், உத்திரம், அத்தம், சித்திரை, சோதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் இவை பன்னிரண்டும் உச்சம் வந்து உச்சமாம். திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி, கார்த்திகை இவை ஒன்பதும் உச்சம் திரிந்து உச்சமாம். ஆவணி முதல் மாதம் நான்கிற்கு அனுஷம் முதலாகவும், மார்கழி முதல் மாதம் நான்கிற்கு உத்திரட்டாதி முதலாகவும், சித்திரை முதல் மாதம் நான்கிற்கு பூசம் முதலாகவும் வைத்து உச்சமான நட்சத்திரம் வரையும் எண்ணிக்கண்ட தொகையை இரண்டேகாலில் பெருக்கி, முன்சொன்ன ஆவணி முதல் மாதம் ஒன்றுக்கு ஐந்தாகத் தள்ளி நின்றதொகை இரவு நாழிகையாம். பகலும் - இரவும் மேக சஞ்சாரமாகில், நாழிகை அறியும்படி, செல்காலம் மூன்றே முக்கால் வீதம் தள்ளி, சிறுவரல் நேர், ஒன்றே கால், ஒன்று, முக்கால், அரை, கால் நாழியாக வைத்துத் தொட்டவிரல் அறிந்து கண்ட நாழிகைக் கூட்டிச் சொல்லுக. நாழிகையறியும் விதம் சாற்றுதல்நாழிகைப்பேருக் காலுவிதத் தைவீ சரம்விரல்ராப் பகறமைத்தல் சனத்துரைசேர்த் திசைத்தன் மேற்றன் மனத் தாற்கணித்தற் குடையவன்தற் பரைக்கும் விதிப்பவனாம் மற்றவரால் விளம்புகல்சற் றரிதான் காற்றசனம் ருத்திரபேர்க் குதித்திரண்டீ ரிரண்டாம் கடிகையதாம் இவைமூல காண்டவியற் குளதாம் மேற்றிறைமற் றோர்க்கொருவன் னெனமலையத் துதித்தான் இதன்மேலே உரைப்பதென்றால் என்னிதயத் தவனே. 93
99 அடிக்கு அந்தந்த மாதப் பகல் நாழிகை பாதியை ஏழில் பெருக்கிக் கொடுக்கக் கண்ட ஈவு பகல் நாழிகையாம் . இரவு நாழிகை அறியும்படி உரோகணி மிருகசிரம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயிலியம் இவை ஆறும் உச்சம் வருமுன் உச்சமாம் . மகம் பூரம் உத்திரம் அத்தம் சித்திரை சோதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் இவை பன்னிரண்டும் உச்சம் வந்து உச்சமாம் . திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி அசுபதி பரணி கார்த்திகை இவை ஒன்பதும் உச்சம் திரிந்து உச்சமாம் . ஆவணி முதல் மாதம் நான்கிற்கு அனுஷம் முதலாகவும் மார்கழி முதல் மாதம் நான்கிற்கு உத்திரட்டாதி முதலாகவும் சித்திரை முதல் மாதம் நான்கிற்கு பூசம் முதலாகவும் வைத்து உச்சமான நட்சத்திரம் வரையும் எண்ணிக்கண்ட தொகையை இரண்டேகாலில் பெருக்கி முன்சொன்ன ஆவணி முதல் மாதம் ஒன்றுக்கு ஐந்தாகத் தள்ளி நின்றதொகை இரவு நாழிகையாம் . பகலும் - இரவும் மேக சஞ்சாரமாகில் நாழிகை அறியும்படி செல்காலம் மூன்றே முக்கால் வீதம் தள்ளி சிறுவரல் நேர் ஒன்றே கால் ஒன்று முக்கால் அரை கால் நாழியாக வைத்துத் தொட்டவிரல் அறிந்து கண்ட நாழிகைக் கூட்டிச் சொல்லுக . நாழிகையறியும் விதம் சாற்றுதல்நாழிகைப்பேருக் காலுவிதத் தைவீ சரம்விரல்ராப் பகறமைத்தல் சனத்துரைசேர்த் திசைத்தன் மேற்றன் மனத் தாற்கணித்தற் குடையவன்தற் பரைக்கும் விதிப்பவனாம் மற்றவரால் விளம்புகல்சற் றரிதான் காற்றசனம் ருத்திரபேர்க் குதித்திரண்டீ ரிரண்டாம் கடிகையதாம் இவைமூல காண்டவியற் குளதாம் மேற்றிறைமற் றோர்க்கொருவன் னெனமலையத் துதித்தான் இதன்மேலே உரைப்பதென்றால் என்னிதயத் தவனே . 93